ஆளுமை:மகேந்திரன், இரத்தினசபாபதி

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:12, 3 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகேந்திரன்
தந்தை இரத்தினசபாபதி
தாய் வேதவல்லி
பிறப்பு 1954.08.27
ஊர் கோப்பாய் தெற்கு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேந்திரன், இரத்தினசபாபதி (1954.08.27 - ) கோப்பாய் தெற்கு, கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், பதிப்பாளர். இவரது தந்தை இரத்தினசபாபதி; தாய் வேதவல்லி. இவர் திருகோணமலை மெதடிஸ்ற் தமிழ் வித்தியாலயம், யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.

இவர் முல்லை அமுதன் என்னும் புனைபெயரில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். நித்திய கல்யாணி (1981), புதிய அடிமைகள் (1983), விடியத்துடிக்கும் ராத்திரிகள் (1984), யுத்தகாண்டம் (1989), விழுதுகள் மண்ணைத் தொடும் (1993), ஆத்மா (1994), விமோசனம் நாளை (1995), ஸ்நேகம் (1998), பட்டங்கள் சுமக்கிறான் (1999), முடிந்த கதை தொடர்வதில்லை (1999), யாகம் (2000), இசைக்குள் அடங்காத பாடல்கள் (2002) போன்றவை இவரது நூல்கள்.

இவர் காற்றுவெளி என்னும் இதழை நடத்திவருவதுடன் பல்லாயிரக்கணக்கான நூல்கள், இதழ்களைச் சேகரித்து அவற்றை ஆவணப்படுத்திக் கண்காட்சிகளையும் நடாத்தி வருகின்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 148-154


வெளி இணைப்புக்கள்