இலங்கைத் தமிழர் - யார், எவர்?
இலங்கைத் தமிழர் - யார், எவர்? | |
---|---|
நூலக எண் | 40 |
ஆசிரியர் | கார்த்திகேசு சிவத்தம்பி |
நூல் வகை | ஆய்வு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கொழும்புத் தமிழ்ச் சங்கம் |
வெளியீட்டாண்டு | 2003 |
பக்கங்கள் | 32 |
[[பகுப்பு:ஆய்வு]]
வாசிக்க
- இலங்கைத் தமிழர் - யார், எவர்? (124 KB) (HTML வடிவம்)
நூல் விபரம்
இலங்கை என்னும் தேச வட்டத்தினுள் தமிழர் எத்தகைய பாகத்தை வகிக்கின்றனர் - அதாவது அவர்களின் வகிபாகம் (role) யாது என்ற கேள்விக்கு விடயி நோக்கில் (objective) பார்த்து ஆராயும் வகையில் கொழும்புத்தமிழ்ச் சங்கத்தினால் ஒரு ஆய்வுத் தொடர் மேற்கொள்ளப்பட்டது. இத்தொடரின் தொடக்கவுரையாக அமையும் கட்டுரையின் நூல்வடிவம் இது. இக்கட்டுரை இலங்கைத்தமிழர் என்னும் எண்ணக்கருவின் (concept) தோற்றத்தையும், அந்த வரையறைக்குள் வருவோர் யாவர் என்பதையும், அவர்களின் தளங்களையும், அந்த வரையறை கிளப்பும் பிரச்சினைகளையும் பற்றிக் கூறுகின்றது.
பதிப்பு விபரம்
இலங்கைத் தமிழர் யார், எவர்? கா.சிவத்தம்பி. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, நவம்பர் 2000. (கல்கிசை: ஐடியல் பிரின்ட்).
32 பக்கம், விலை: ரூபா 50. அளவு: 20.5*14.5 சமீ.
-நூல் தேட்டம் (# 1953)