ஆளுமை:பித்தன் ஷா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:59, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பித்தன் ஷா
பிறப்பு 1921.07.31
இறப்பு 1994.12.15
ஊர் மட்டக்களப்பு, கள்ளியங்காடு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பித்தன் ஷா (1921.07.31 - 1994.12.15) மட்டக்களப்பு, கள்ளியங்காட்டைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது இயற்பெயர் கலந்தர் லெப்பை மீராஷா. இவர் தனது பதினெட்டாவது வயதில் தென்னிந்தியா சென்று ஸ்டார் பிரஸ் என்னும் அச்சகத்தில் காரியாலய ஊழியராகப் பணியாற்றிய காலத்தில் புதுமைப்பித்தனுடன் ஏற்பட்ட தொடர்பினால் அவரது எழுத்துக்களால் கவரப்பட்டு அவரைப்போல் எழுத ஆரம்பித்தார். இதனால் தனது பெயரைப் பித்தன் ஷா என மாற்றிக்கொண்டார். இவர் இந்திய இராணுவத்தில் சில காலம் இணைந்து பணியாற்றிய பின் 1944 இல் இலங்கை திரும்பினார்.

1949 இல் செல்லையா இராஜதுரை, எம். எஸ். ஏ. அசீஸ் ஆகியோருடன் இணைந்து 'லங்கா முரசு' என்னும் சஞ்சிகையை ஆறு இதழ்கள் வரை வெளியிட்டார். இச்சஞ்சிகையில் இவருடைய இருள் என்ற முதற் சிறுகதை வெளியானது. இவரது காத்திரமான இலக்கியப் படைப்புகளில் பாதிக் குழந்தை, தாம்பத்தியம் ஆகியவை தேசிய ரீதியில் பாரட்டுப் பெற்றவை. மேலும் இவர் மனச்சாந்தி, தனிமை, இருட்டு, நத்தார் பண்டிகை, வேதவாக்கு, ஊதுகுழல், முதலிரவு, முள்ளும் மலரும், ஊர்வலம், தாகம், விடிந்ததும் விடியாததும், ஒரு நாள் பொழுது, அறுந்த கயிறு, திருவிழா, சாந்தி ஆகிய சிறுகதைகளைப் படைத்துள்ளார். இவரது சிறுகதைப் படைப்புக்கள் 1995 ஆம் ஆண்டு மல்லிகைப்பந்தல் வெளியீடாக 'பித்தன் கதைகள்' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்பு

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 79-82
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பித்தன்_ஷா&oldid=196259" இருந்து மீள்விக்கப்பட்டது