ஆளுமை:பத்மநாதன், சோமசுந்தரம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:11, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பத்மநாதன்
தந்தை சோமசுந்தரம்பிள்ளை
பிறப்பு 1939.09.14
ஊர் வண்ணார்பண்ணை
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பத்மநாதன், சோமசுந்தரம்பிள்ளை (1939.09.14 - ) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர், எழுத்தாளர். இவரது தந்தை சோமசுந்தரம்பிள்ளை. இவர் சோ. ப என அறியப்படுகின்றார். வைத்திலிங்க வித்தியாசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். இவர் சிறப்புக் கலைமாணி, டிப்ளோமா இலக்கியம், டிப்ளோமாக் கல்வி ஆகிய பட்டங்களைப் பெற்றதோடு பலாலி ஆசிரியர் கலாசாலையின் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது சைவ வித்தியா விருத்திச்சங்கத்தின் தலைவராகப் பணியாற்றி வருகின்றார்.

இவர் யாழ்ப்பாணத்தில் பல இலக்கிய விழாக்களில் கவிதை அரங்குகளை வழங்கி வருகின்றார். இவரது முதற் கவிதைத் தொகுதி வடக்கிருத்தல் 1998 இல் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து நினைவுச் சுவடுகள் என்ற கவிதைத் தொகுதியை எழுதியும் ஆபிரிக்க கவிதை, தென்னிலங்கைக் கவிதை ஆகிய இரு கவிதை நூல்களைத் தமிழிலும் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் மூன்று நாடகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். இவர் 1996 ஆம் ஆண்டு நல்லூர் முருகன் காவடிச் சிந்து என்ற ஒலிப்பேழையை வெளியிட்டுள்ளார்.

இவருக்கு இருமுறை மாகாணப் பரிசும், ஒருதடவை சாகித்திய மண்டலப் பரிசும், ஆளுநர் விருதும், நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவையின் கலைஞானச் சுடர் பட்டமும் கிடைத்துள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

பத்மநாதன், சோமசுந்தரம்பிள்ளை பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்


வளங்கள்

  • நூலக எண்: 10202 பக்கங்கள் 14-16
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 24
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 93-96
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 38
  • நூலக எண்: 10202 பக்கங்கள் 14