ஆளுமை:பஞ்சாட்சர சர்மா, சபாபதி ஐயர்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:02, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பஞ்சாட்சர சர்மா
தந்தை சபாபதி ஐயர்
பிறப்பு 1916.11.13
ஊர் கோப்பாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பஞ்சாட்சரசர்மா, சபாபதி ஐயர் (1916.11.13 - ) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவரது தந்தை சபாபதி ஐயர். இவர் தனது ஆரம்பக் கல்வியை கோப்பாய் ஜம்புகேஸ்வரக் குருக்களிடம் கோவிற் பாடசாலையில் பெற்ற பின் சுன்னாகம் பிராசீனப் பாடசாலையில் வித்துவான் சி. கணேசையரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்று 1933 ஆம் ஆண்டு பிரவேச பண்டிதப் பரீட்சையில் சித்தி பெற்றார். அத்துடன் சமஸ்கிருத மொழியையும் கற்றுக்கொண்டார். இவர் இந்து சமயப் பாடநூல் எழுதியும் இந்தியாவிலிருந்து வடமொழிப் பரீட்சை நடத்தும் பிரபல ஸ்தாபனங்கள் மூலம் சமஸ்கிருதப் பரீட்சைகள் நடத்தியும் வந்தார்.

இவர் 1939 ஆம் ஆண்டு இலங்கை விகடன் பத்திரிகை மூலம் எழுத்துலகில் பிரவேசித்தார். இவர் ஈழகேசரி, ஆனந்தன், கலைச்செல்வி, நவசக்தி, வீரசக்தி, கலாமோகினி, பாரததேவி, காந்தியம், ஈழநாடு முதலான வெளியீடுகளில் வடகோவைவாணன், பரம், நச்சினாக்கினியன், பாரத்ஜென், வாத்தியார், அக்ஷ்ரம், இரட்டையர்கள் முதலான புனைபெயர்களில் கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புக்கள் போன்றவற்றை எழுதியுள்ளார்.

இவர் பல வடமொழி நூல்களின் பதிப்பாசிரியராகவும் மூன்று பாராட்டு விழா மலர்களுக்குத் தொகுப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளதோடு வானொலிப் பேச்சுக்கள், சைவநற்சிந்தனைகளை வழங்கியுள்ளார். இவர் சிவானந்த குருகுலத்தினரால் 'துவிபாஷா துரந்தரர்' என்ற பட்டம் வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 36-39
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 66-69
  • நூலக எண்: 1027 பக்கங்கள் 19-23
  • நூலக எண்: 1028 பக்கங்கள் 07-10
  • நூலக எண்: 2057 பக்கங்கள் 25