ஆளுமை:தாசீயஸ், அ.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:08, 1 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தாசீயஸ்
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தாசீயஸ், அ. நாடகக் கலைஞர், ஊடகவியலாளர். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும்போது அங்கிருந்த நாடக அரங்கில் சேர்ந்து பயிற்சி பெற்றுப் பின்னர் உலகப் புகழ் பெற்ற ஜராங்கனி சேரசிங்கவிடம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயிற்சி பெற்றார்.

இவர் நாடக சிந்தனையாளர்களுக்குப் பிதாமகனாகக் கருதப்படுகின்றார். இவர் நெறியாள்கை செய்த புகழ்பெற்ற நாடகங்களில் மகாகவியின் "புதியதோர் வீடு" நாடகம் குறிப்பிடத்தக்கது. இவர் 1975 ஆம் ஆண்டு விழிப்பு என்னும் நாடகத்தில் நடித்தமைக்காகச் சிறந்த நடிகருக்கான பரிசைப் பெற்றார். 1980 இல் நடைபெற்ற 1978 ஆம் ஆண்டுக்கான தேசிய நாடக விழாவில், நாடக அரங்கக் கல்லூரி தயாரித்து இவரால் நெறிப்படுத்தப்பட்ட பொறுத்தது போதும் என்னும் நாடகம் நான்கு சிறந்த பரிசுகளைப் பெற்றதோடு பார்வையாளர்களின் பாராட்டுதலையும் பெற்றுச் சிறந்த நாடகத்துக்கான ஜனாதிபதி விருதையும் சிறந்த பிரதிக்கான பரிசினையும் சிறந்த நெறியாளருக்கான பரிசினையும் பெற்றது. மேலும் இதில் நடித்த அ. பிரான்சிஸ் ஜெனம் சிறந்த நடிகருக்கான பரிசை வென்றெடுத்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 160
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 130-133
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தாசீயஸ்,_அ.&oldid=195894" இருந்து மீள்விக்கப்பட்டது