ஆளுமை:சோமஸ்கந்த சிவாச்சாரியார், கந்தசாம்பசிவ

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:47, 1 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சோமஸ்கந்த சிவாச்சாரியார்
தந்தை கந்தசாம்பசிவம்
பிறப்பு
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோமஸ்கந்த சிவாச்சாரியார், கந்தசாம்பசிவம் யாழ்ப்பாணம், நல்லூர், நாயன்மார்கட்டைச் சேர்ந்த வில்லிசைக் கலைஞர். இவரின் தந்தை கந்தசாம்பசிவம். இவர் சிறுவயதிலிருந்து அந்தண மரபுசார்ந்த குருகுலக்கல்வி முறையை நல்லூரில் அந்தணச் சிறுவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கபணதீஸ்வர குருகுலத்தில் முறைசார்ந்து குருகுல வேதாகமக் கல்வி பயின்று பாலபண்டிதப் பரீட்சையில் தேறியவர். அத்துடன் தனது தந்தையிடம் புராண இதிகாசத் தர்ம சாஸ்திர விடயங்களைக் கற்று வந்தார். இவரிடம் நல்ல குரல்வளம், சொற்சுத்தத்துடன் பேசுகின்ற ஆற்றல், கவிதை இயற்றும் ஆற்றல், நளினமாக நடனமாடும் ஆற்றல், வாத்தியங்கள் பலவற்றை மீட்டும் திறன், எழுத்தாற்றல் என்பன வளரத் தொடங்கின. இவர் குறுகிய காலத்தில் தரமான வில்லிசைக் கலைஞர்களில் ஒருவராக மிளிர்ந்தார்.

இவர் சிவாலயக் கிரியைகளின் உள்ளீடாகக் கொண்டிருக்கும் ஓவியம், சிற்பம், அலங்காரக் கலைகள் (சாத்துப்படி சாற்றுதல்) போன்றவற்றில் சிறந்து விளங்கியதுடன் சோதிடக் கலையிலும் பாண்டித்தியம் பெற்றிருக்கின்றார். இவர் ஈழநல்லூர் சிறிதேவி வில்லிசைக்குழு என்ற பெயரில் கடந்த 30 ஆண்டுகளாகக் கலைப்பணி ஆற்றிவருவதுடன், யப்பான் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவித்திருக்கின்றது. இவருக்கு வில்லிசைக் கலாநிதி, கலைமாமணி, கிரியாதத்வநிதிதி உட்படப் 16 பட்டங்கள் கிடைத்திருக்கின்றது. இவர் மாணவர் வில்லுப்பாட்டு, ஆகமச்சித்திரங்கள் 2 பாகங்கள், ககாரகணபதி தியானார்ச்சனா (சமஸ்கிருதம்), பத்திரகாளி மண்டப பூசை ஆகிய நூல்களை எழுதியிருக்கின்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 610-612