ஆளுமை:சோமசுந்தரேஸ்வரன், கதிர்காமலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சோமசுந்தரேஸ்வரன்
தந்தை கதிர்காமலிங்கம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை விரிவுரையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோமசுந்தரேஸ்வரக் குருக்கள், கதிர்காமலிங்கம் நயினாதீவைப் பிறப்பிடமாகவும் புங்குடுதீவு 5 ஆம் வட்டாரத்தை வதிவிடவாகவும் கொண்ட விரிவுரையாளர். இவரது தந்தை கதிர்காமலிங்கம். இவர் ஆரம்பக் கல்வியைப் புங்குடுதீவு இறுப்பிட்டி ஶ்ரீ சித்தி விநாயகர் வித்தியாசாலையிலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியற் கல்வியைப் பயின்று B.Sc பட்டத்தைக் குடிசார் பொறியியற்துறையில் பெற்றார்.

ஜேர்மனி நாட்டினால் வழங்கப்பட்ட DAAD Scholarship பெற்றுத் தாய்லாந்தில் அமைந்துள்ள Asian Institute of Technology இல் மேற்படிப்பை மேற்கொண்டு Master of Engineering பட்டத்தைப் பெற்றார். அத்துடன் ஜப்பான் நாட்டினால் வழங்கப்பட்ட Monbashu Scholarship பெற்று Yokohama National University இல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார். இவரது மேற்படிப்புக்கள் அனைத்தும் Full Scholarships மூலமாகவே மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

றுகுணு பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீடத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர், பொறியியல் புதிய பாடத்திட்டங்களை வகுப்பது முதல் பீட அபிவிருத்தி சம்பந்தமான சகல விடயங்களிலும் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார். பல நாடுகளிலும் நடைபெற்ற பொறியியல் சார் மகாநாடுகளில் கலந்து கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்த இவருக்கு, 2004 ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதியின் விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 180-181