ஆளுமை:செல்வசேகரன், முத்தையா
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:39, 1 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | செல்வசேகரன் |
தந்தை | முத்தையா |
தாய் | அந்தோனியம்மா |
பிறப்பு | |
இறப்பு | 2012.12.28 |
ஊர் | பாணந்துறை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்வசேகரன், முத்தையா ( - 2012.12.28 ) கொழும்பு, பாணந்துறையைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை முத்தையா; தாய் அந்தோனியம்மா. இவர் கொழும்பு கொச்சிக்கடை சென் பெனடிக்ட் கல்லூரியில் கல்வி பயின்றார்.
இவர் இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் எஸ். ராம்தாசின் "கோமாளிகள் கும்மாளம்' தொடரிலும் எஸ். எஸ். கணேசபிள்ளையின் 'இரை தேடும் பறவைகள்' தொடரிலும் கே. எஸ். பாலச்சந்திரனின் 'கிராமத்துக் கனவுகள்' தொடரிலும் நடித்துள்ளார். கோமாளிகள், ஏமாளிகள், நாடு போற்ற வாழ்க போன்ற இலங்கைத் திரைப்படங்களில் நடித்துள்ள இவர், நடிகர் வி. பி. கணேசனுக்குப் புதிய காற்று, நான் உங்கள் தோழன், நாடு போற்ற வாழ்க போன்ற படங்களில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். புஞ்சி சுரங்கனாவி என்ற படத்தில் நடித்ததற்காக இவர் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 10571 பக்கங்கள் 97-102