ஆளுமை:சுப்பிரமணியம், பெரியதம்பி

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:30, 1 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பிரமணியம்
தந்தை பெரியதம்பி
பிறப்பு 1923.09.21
இறப்பு 2006
ஊர் நல்லூர்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம், பெரியதம்பி (1923.09.21 - 2006) யாழ்ப்பாணம், நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓவியர். இவரது தந்தை பெரியதம்பி. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர் வகுப்பு வரை கல்வி கற்ற இவர், சிறுவயது முதல் ஓவியம் வரைதலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

நல்லூரில் தான் வாழ்ந்த இல்லத்தில் கலைக்கூடம் அமைத்துச் செயற்பட்டு வந்த இவரை எல்லோரும் ஆட்டிஸ்ற் மணியம் என அழைக்கலானார்கள். ஈழநாட்டில் இந்தியத் திரைப்படங்களுக்குக் கட்டவுட் அமைக்கும் கலாச்சாரம் மேலோங்கி இருந்த காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் அதியுயர் கட்டவுட்டை ஓவியமாக வரைந்துள்ளார். இவர் வாழ்ந்த காலப்பகுதிக்குள் சுமார் இருபதாயிரம் ஓவியங்களை வரைந்துள்ளார்.

இவரின் ஓவியக் கலையாற்றலை உள்நாட்டுப் பத்திரிகைகளும் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனமும் ஐரோப்பாவில் இயங்கும் தமிழ்ப் பத்திரிகைகளும் தமிழர் தொலைகாட்சிச் சேவையும் வெளியிட்டும் காட்சிப்படுத்தியும் வந்துள்ளன. இவர் பல நிறுவனங்களால் ஓவியச் செல்வன், ஓவியச் சுடர்மணி ஆகிய பட்டங்களையும் பேராசிரியர் கைலாசபதி விருதினையும் பெற்றுக் கொண்டதுடன் 1998 ஆம் ஆண்டு இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் கலாபூஷணம் விருதையும் 2005 ஆம் ஆண்டு நல்லூர் கலாச்சாரப் பேரவையின் கலைஞானச்சுடர் விருதையும் பெற்றுக் கொண்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 187
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 248-249