ஆளுமை:சிவலிங்கராஜா, சிதம்பரப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:53, 31 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவலிங்கராஜா
தந்தை சிதம்பரப்பிள்ளை
பிறப்பு 1945.12.16
ஊர் கரவெட்டி
வகை பேராசிரியர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவலிங்கராஜா, சிதம்பரப்பிள்ளை (1945.12.16 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பேராசிரியர், எழுத்தாளர். இவரது தந்தை சிதம்பரப்பிள்ளை. இவர் ஈழத்து நாட்டார் வழக்குகள், மற்றும் கல்விப் பாரம்பரியங்கள் தொடர்பான ஆய்வாளர்கள் வரிசையில் தனித்துவம் பெற்று நிற்பவர். யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பட்டதாரியாக முதற்பிரிவில் தேறிய இவர், அங்கேயே கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுத் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

இவர் ஈழத்து இலக்கியம் இவருடைய சிறப்புத்துறை ஆகும். வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும், ஈழத்துத் தமிழ் உரைமரபு, யாழ்ப்பாணத்து வாழ்வியல் கோலங்கள், வித்துவ சிரோமணி கணேசையரின் வாழ்வும் பணியும், யாழ்ப்பாணத்துத் தமிழ் உரை மரபு, 19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி ஆகிய ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.

இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் இந்தியா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தமிழ் இலக்கிய நாயகனாக உலா வந்தவர். அத்தோடு உலகத் தமிழியல் ஆய்வுக் கருத்தரங்குகள் பலவற்றில் கலந்து கொண்டுள்ளார். இவருடைய மேடைப்பேச்சுக்கள் மிகவும் வான்மை நிறைந்தவை. அவரது பேச்சில் சிலேடையும், நகைச்சுவையும் அதேநேரத்தில் ஆழமான கருத்தும் நிறைந்திருக்கும்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 72
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 20-21
  • நூலக எண்: 405 பக்கங்கள் 53-54
  • நூலக எண்: 14524 பக்கங்கள் 29-31