ஆளுமை:சிவகுமாரன், கே. எஸ்.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:45, 31 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவகுமாரன்
பிறப்பு 1936.10.01
ஊர் மட்டக்களப்பு, புளியந்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுமாரன், கே. எஸ். (1936.10.01 - ) மட்டக்களப்பு, புளியந்தீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் இலங்கையிலும் பின்னர் ஓமானில் 1998 முதல் 2002 ஆம் ஆண்டு வரை ஆங்கில இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் மாலைதீவிலும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் இலக்கியம், நாடகம், திரைப்படம், ஊடகங்கள், அறிவியல், செய்தித் திறனாய்வுகள், அரசியல் திறனாய்வுகள், இசை, நடனம், ஓவியம், மொழிபெயர்ப்பு, சிறுகதை, கவிதை போன்ற பல துறைகளில் எழுதி ஒலி, ஒளி பரப்பி வந்திருக்கின்றார்.

இவர் 1959 இல் எழுதிய முதலாவது இலக்கியத் திறனாய்வுக் கட்டுரை நாவலாசிரியர் வரிசையில் வரதராசனாரின் இடம் என்பதேயாகும். இவர் ஏறக்குறைய 30 தமிழ் நூல்களையும் 2 ஆங்கில நூல்களையும் இரண்டு ஆங்கிலமொழிக் கலைக்களஞ்சியங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் இவர் Aspects of Culture in Sri Lanka, Tamil Writing in Sri Lanka, அசையும் படிமங்கள், அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் - பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும், இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம், இருமை, ஈழத்து எழுத்தாளர்கள் ஒரு விரிவான பார்வை, ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில திறனாய்வுக் குறிப்புகள், ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் - ஒரு பன்முகப் பார்வை, ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்: திறனாய்வு உட்படப் பல நூல்களை எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 177
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 201-204
  • நூலக எண்: 2026 பக்கங்கள் 14-20
  • நூலக எண்: 8715 பக்கங்கள் 03-04
  • நூலக எண்: 10164 பக்கங்கள் 02
  • நூலக எண்: 11663 பக்கங்கள் 30
  • நூலக எண்: 9858 பக்கங்கள் 06-08