ஆளுமை:சரஸ்வதி, பாக்கியராசா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:00, 26 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:சரஸ்வதி பாக்கியராசா, ஆளுமை:சரஸ்வதி, பாக்கியராசா என்ற தலைப்புக்கு நகர்...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சரஸ்வதி, பாக்கியராசா
பிறப்பு 1928.04.07
ஊர் கொக்குவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரஸ்வதி, பாக்கியராசா (1928.04.07 - ) சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக்கலைஞர். தனது ஒன்பதாவது வயது முதல் இசை பயில ஆரம்பித்துத் தென்னிந்திய இசைக் கலைஞர்களிடம் இசை பயின்றார். 1942 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக மகாயுத்த ஆரம்ப நாளன்று இவரின் முதல் இசைக் கச்சேரி சிங்கப்பூர் வானொலியில் ஒலிபரப்பாகியது.

இவர் தனது தாயாரின் சொந்த இடமான கொக்குவிலுக்கு வந்து 1948 ஆம் ஆண்டு முதல் கொக்குவில் இந்துக் கல்லூரியின் சங்கீத ஆசிரியராக நியமனம் பெற்றார். 1957 ஆம் ஆண்டு சென்னை சென்று கர்நாடக இசைக் கல்லூரியில் இணைந்து சங்கீத வித்துவான் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். 1974 ஆம் ஆண்டு இசை விரிவுரையாளராகக் கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டார்.

கோயில்களில் கச்சேரி செய்ய ஆரம்பித்த முதற் பெண்மணி இவராவார். இவரது இசைக் கச்சேரிகள் வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளது. பாலர் விஹாஸ் என்ற பாலருக்கான பண்ணிசைப் பாடல் வகுப்பினை ஆரம்பித்துச் சிறுபிள்ளைகளையும் ஊக்குவித்தார். வட இலங்கை சங்கீத சபை நடாத்தி வரும் சங்கீதப் பரீட்சைகளுக்காகக் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மாணவ மாணவிகளைத் தயார்படுத்திச் சித்தியடைய வழிசெய்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 84