ஆளுமை:குமாரசாமிப்பிள்ளை, முருகேசு
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:03, 21 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | குமாரசாமிப்பிள்ளை |
தந்தை | முருகேசு |
பிறப்பு | 1906 |
ஊர் | வேலணை |
வகை | தொழிலதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குமாரசாமிப்பிள்ளை, முருகேசு (1906 - ) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்த்தகர். இவரது தந்தை முருகேசு. இவர் யாழ்ப்பாண நகரில் கொட்டடிப் பகுதியில் தனது வியாபாரத்தை மேற்கொண்டிருந்தார். யாழ் நகரில் கிடைக்கின்ற வசதி வாய்ப்புக்கள் தீவுப் பகுதி மக்களிற்கும் கிடைக்கவேண்டும் என்ற சிந்தையுடன் தீவகத்திற்கான போக்குவரத்துப் பாதை அமைப்பதில் முன்னின்று உழைத்தவர்.
வியாபாரத்தில் ஈடுபட்ட அதேசமயம் சமூக சேவைகளிலும் இறைபணிகளிலும் ஈடுபட்டார். இவர் வேலணை கிராம சபையில் அங்கத்தவராகவும் உபதலைவராகவும் இருந்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 416-419