ஆளுமை:கார்த்திகேசு, கருப்பையாப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கார்த்திகேசு
தந்தை கருப்பையாப்பிள்ளை
பிறப்பு
ஊர் மாத்தளை
வகை கலைஞர், பதிப்பாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கார்த்திகேசு, கருப்பையாப்பிள்ளை மாத்தளையைச் சேர்ந்த நாடகக் கலைஞர், பதிப்பாளர். இவரது தந்தை கருப்பையாப்பிள்ளை. இவர் மாத்தளை கார்த்திகேசு எனவும் அழைக்கப்பட்டார். மாத்தளை விஜய கல்லூரியிலும் கிறிஸ்தவக் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.

இவர் 50களில் கிறிஸ்தவக் கல்லூரியின் மாணவனாக இருந்த நாட்களில், கல்லூரியின் உப அதிபர் திரு.செல்லத்துரை மேடையேற்றிய ‘நலமே புரியின் நலமே விளையும்’ நாடகத்திலும் மாத்தளை புனித.தோமையார் கல்லூரி ஆசிரியர் ராஜரட்ணத்தின் ‘அன்பின் வெற்றி, ‘இதுதான் முடிவு’ நாடகங்கள் மூலம் நாடகத்துறைக்குள் உள்வாங்கப்பட்டார். கவின் கலை மன்றத் தயாரிப்பான ‘பலே புரடியூசர்’ , ‘வெண்ணிலா’ போன்ற நாடகங்களிலும் நடித்தார்.

1971 இல் இவரின் ‘தீர்ப்பு’ நாடகம் அந்தனி ஜீவாவின் இயக்கத்தில் அரங்கியல் நெறியாளர் சுஹைர் ஹமீட்டால் மேடையேற்றப்பட்டது. இவர் 25 இற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதித் தயாரித்துள்ளார். இவருடைய நாடகப் பிரதிகள் கொழும்புப் பல்கலைக்கழகம், மொரட்டுவைப் பல்கலைக்கழகம், கொழும்பு றோயல் கல்லூரி, சென். ஜோசப் கல்லூரி, வெஸ்லி கல்லூரி, புனித அன்னம்மாள் பாடசாலைகளில் தமிழ் விழாக்களில் மாணவர்களால் மேடையேற்றப்பட்டுள்ளன. இவர் தன்னுடைய ‘குறிஞ்சிப் பதிப்பகம்' மூலமாக 16 இலக்கிய நூல்களை வெளியிட்டிருக்கின்றார்.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 118-121
  • நூலக எண்: 10571 பக்கங்கள் 141-144