ஆளுமை:கனகசபாபதி, பூபாலபிள்ளை
பெயர் | கனகசபாபதி |
தந்தை | பூபாலபிள்ளை |
தாய் | சுந்தரம்மா |
பிறப்பு | 1945 |
ஊர் | திருக்கோவில், மட்டக்களப்பு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கனகசபாபதி, பூபாலபிள்ளை (1945- ) மட்டக்களப்பு, திருக்கோவிலைச் சேர்ந்தவர். இவரது தந்தை பூபாலபிள்ளை; இவரது தாய் சுந்தரம்மா. இவர் எஸ். பி.செவ்வேள், கதா, கனெக்ஸ், கல்கிதாசன் ஆகிய புனைபெயர்களைக் கொண்டவர். இவர் திருக்கோயில் மெதடிஸ்த மிசன் பாடசாலை, கல்லடி இராமகிருஷ்ண மிசன் சிவானந்த வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றுப் பெரதேனியாப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றார்.
இவர் திருஞானவாணி, அறப்போர் அரியநாயகம், கல்கிதாசன் கவிதைகள், தேரோடும் திருக்கோவில் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். கனடாவில் வெளிவந்த முதல் சஞ்சிகையான 'எழில்' சஞ்சிகையின் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் கூத்துக் கலையில் ஈடுபாடு கொண்டு வில்விஜயன் என்னும் வடமோடிக் கூத்தைக் கனடாவில் பழக்கி அரங்கேற்றியவர். இவர் தனது படைப்பாற்றலுக்காய் சுவாமி விபுலானந்தர் நினைவுத் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 172-173