ஆளுமை:உருத்திராபதி, சோமசுந்தரம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:41, 20 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உருத்திராபதி
தந்தை சோமசுந்தரம்
பிறப்பு 1900
இறப்பு 1980.05.24
ஊர் மாவிட்டபுரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உருத்திராபதி, சோமசுந்தரம் (1900 - 1980.05.24) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை சோமசுந்தரம். இவர் இந்தியா சென்று சிதம்பரம் நாதஸ்வர வித்துவான் வைத்தியநாதனிடமும், தண்டாயுதபாணியிடமும் நாதஸ்வரக் கலையைப் பயின்றார். இவர் தமக்கென ஒரு பாணியைக் கையாண்டு கர்த்தாராகங்களை வாசிப்பதிலும், இராகங்களை மத்திம சுருதி உருப்படி வாசிப்பதிலும், பல்லவி ஸ்வரங்களை வித்தியாசமான தாளங்களில் சரளமாக வாசிப்பதிலும் ஆற்றல் பெற்று விளங்கினார்.

இக்கலைஞரின் தொண்டினைப் பாராட்டிச் சிறந்த வித்துவானென அன்னாருக்கு இசைக் கலா ரசிகர்கள் சார்பில், மாவை ஆதீன முதல்வர் பிரம்மஶ்ரீ சு. துரைச்சாமிக்குருக்கள் அவர்களால் தங்க நாதஸ்வரம் வழங்கப்பட்டது. மேலும் சங்கீத வித்துவ பூஷணம் என்ற பட்டமும், சங்கீத வித்துவமணி என்ற பட்டமும் இவருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 21-25