ஆளுமை:உபாலி லீலாரட்ண, குணபால

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:29, 20 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:உபாலி லீலாரட்ண, ஆளுமை:உபாலி லீலாரட்ண, குணபால என்ற தலைப்புக்கு நகர்த்தப...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உபாலி லீலாரட்ன
தந்தை குணபால
தாய் குசுமாவதி
பிறப்பு 1958.01.01
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உபாலி லீலாரட்ன, குணபால (1958.01.01 - ) மாத்தறை, அஹங்கமவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குணபால; தாய் குசுமாதேவி. தலவாக்கலை சுமன சிங்கள மகா வித்தியாலயம், நுகவெல மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.

இவர் சிங்களவராக இருந்த போதும் தனக்கிருந்த தமிழ் மொழியின் அறிவினால், தீபம் சஞ்சிகையின் தொகுப்பாசிரியராகக் கடமையாற்றியதோடு மனித வெடிகுண்டு என்ற சிறுகதையை மொழிபெயர்த்துள்ளார். மேலும் பூலான்தேவி, சதாம்ஹுசைன், சந்தனக்காட்டு, சிறுத்தை, தெனாலிராமன் கதைகள், அம்புலி மாமா கதைகள் போன்றவற்றையும், தமிழக எழுத்தாளர் பிரபஞ்சனின் நேற்று வந்த நிலா, கனவு மெய்ப்பட வேண்டும், நீளநதி போன்ற நாவல்களையும், நேற்றைய மனிதர்கள் சிறுகதைத் தொகுதியையும் மொழிபெயர்த்துள்ளார். இவ்வாறு 35 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர், 23 தமிழ்மொழி நூல்களைச் சிங்கள மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 14323 பக்கங்கள் 03-06
  • நூலக எண்: 13952 பக்கங்கள் 22-23