ஆளுமை:அல்-அஸுமத், பொன்னையா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:57, 18 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:அல்-அஸுமத், ஆளுமை:அல்-அஸுமத், பொன்னையா என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டு...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அல்-அஸுமத்
தந்தை பொன்னையா
தாய் மரியாயி
பிறப்பு 1942.11.22
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அல்-அஸுமத், பொன்னையா (1942.11.22 - ) மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது இயற்பெயர் வேலாயுதம். இவரது தந்தை பொன்னையா; தாய் மரியாயி. 1960 ஆம் ஆண்டிலிருந்து 1964 ஆம் ஆண்டு வரை எல்கடுவை அசோகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய இவர் தெஹிவளை - கொலேஜ் ஒஃப் டெக்னோலஜியின் வணிகப் பிரிவில் முகாமையாளராகவும் 1978 வரையில் கடமையாற்றினார்.

மாத்தளையான், விருச்சிகன், சாத்தன், அபூமுனாஃப், புல்வெட்டித்துறைப் புலவர் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், விமர்சனங்கள், குறுங்காவியங்கள் எழுதியுள்ளார். இவரின் பூவின் காதல் என்ற முதல் சிறுகதையும், முதல் கவிதையும் வீரகேசரியில் வெளிவந்தன. அதனைத் தொடர்ந்து புலராப் பொழுதுகள் (குறுங்காவியம்), மலைக்குயில் (கவிதைத் தொகுப்பு), பிலால் (மொழிப்பெயர்ப்பு) முதலான ஆக்கங்களும் வெளிவந்துள்ளன.

யாழ்ப்பாண இலக்கிய வட்டத்தின் மிகச்சிறந்த கவிதை நூலுக்கான விருது, தேசிய அரச சாஹித்திய விருது, சிரித்திரன் சுந்தர் நினைவு விருது, முஸ்லிம் எழுத்தாளர் தேசியக் கவுன்சில் விருது, தமிழியல் விருது ஆகிய விருதுகளையும் இலக்கியச் சாகரம், கவித் தாரகை ஆகிய பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 67-69
  • நூலக எண்: 12591 பக்கங்கள் 03-04