ஆளுமை:அகிலேசபிள்ளை, வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அகிலேசபிள்ளை
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு 1853.02
இறப்பு 1910.01
ஊர் திருகோணமலை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அகிலேசபிள்ளை, வேலுப்பிள்ளை (1853.02 - 1910.01) திருகோணமலையைச் சேர்ந்த ஒரு புலவர், பதிப்பாசிரியர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. திருகோணமலையில் வாழ்ந்த குமாரவேற்பிள்ளை ஆசிரியரிடம் நீதி நூல்களையும் நிகண்டையும் கற்ற இவர், 1872 முதல் பயிற்றப்பெற்ற ஆசிரியராகவும் அரசினர் கல்லூரி அதிபராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவரது நூல்களாக திருகோணமலை விசுவநாதசுவாமி ஊஞ்சல், திருகோணமலை சிவகாமியம்மன் ஊஞ்சல், திருகோணமலை பத்திரகாளி ஊஞ்சல், நிலாவெளி சித்திவிநாயகர் ஊஞ்சல், திருக்கோணை நாயகர் பதிகம், திருகோணமலை வில்லூன்றி கந்தசாமி பத்துப் பதிகம் திருகோணமலை விசாலாட்சியம்மை பெருங்கழிநெடில் விருத்தம், வெருகல் சித்திரவேலாயுதசாமி பேரிற் சொல்லிய அடைக்கலமாலை, ஊசல், வெருகல் சித்திரவேலாயுதசாமி பேரில் சிறைவிடுபதிகம், நெஞ்சறிமாலை, திருக்கோணாசல வைபவம் ஆகியன விளங்குகின்றன. இவர் திருக்கரசைப் புராணம், வெருகல் சித்திரவேலாயுதர் காதல், நரேந்திர சிங்கராசன் வசந்தன் சிந்து ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 252
  • நூலக எண்: 13816 பக்கங்கள் 97-105
  • நூலக எண்: 16357 பக்கங்கள் 66-75
  • நூலக எண்: 11601 பக்கங்கள் 149-156
  • நூலக எண்: 399 பக்கங்கள் 35-39