ஆளுமை:வேல் ஆனந்தன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேல் ஆனந்தன்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேல் ஆனந்தன் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட நடனக் கலைஞர். நடனக் கலையைப் பயிலுவதற்காகத் தனது பதினாறாவது வயதில் இந்தியாவுக்குச் சென்ற இவர், கோபிநாத்திடம் நடனத்தைப் பயின்று பின் டில்லி சென்று கேரளா கலா கேந்திராவில் இரண்டு வருடங்கள் தனது பயிற்சியைத் தொடர்ந்தார். இவர் பந்தன நல்லூர் சுப்பராய பிள்ளையிடமும் பரதம் கற்றார். இவரது நாட்டிய நாடகமான பஸ்மாசுர மோகினி 1970 ஆம் ஆண்டு மேடையேறியது.

இவரின் முத்திரை பதித்த நாட்டிய நிகழ்ச்சிகளாக இதுவரை இந்திரன் ஆணை, பஸ்மாசுர மோகினி, பாமா விஜயம், கீதா அபசுரணம், பெண்புறா, அருளும் இருளும், ஆலய மணி, தேரோட்டியின் மகன், பஸ்மாசுரன், என்ன தான் முடிவு போன்றவை அரங்கேறியுள்ளன. இவருக்கு இந்தியா மக்கள் தேற்றா அமையம் 1973 ஆம் ஆண்டு ஈழத்திலிருந்து அங்கீகரித்த ஒரே ஒரு ஆடல் வல்லுனன் என்ற தகைமையை அளித்துக் கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 347
  • நூலக எண்: 4293 பக்கங்கள் 119-122
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வேல்_ஆனந்தன்&oldid=192230" இருந்து மீள்விக்கப்பட்டது