ஆளுமை:முருகையன், இராமுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முருகையன்
தந்தை இராமுப்பிள்ளை
தாய் செல்லம்மா
பிறப்பு 1935.04.23
ஊர் சாவகச்சேரி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகையன், இராமுப்பிள்ளை (1935.04.23 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கல்வயலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இராமுப்பிள்ளை; இவரது தாய் செல்லம்மா. இவர் ஆரம்பக் கல்வியைக் கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும் இடைநிலைக் கல்வியைச் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் யாழ். இந்துக் கல்லூரியிலும் கற்று, இலங்கைப் பல்கலைக்கழகக் கொழும்பு வளாகத்தில் பயின்று 1956 ஆம் ஆண்டு விஞ்ஞானப் பட்டதாரியானார். இவர் 1961 ஆம் ஆண்டு இலண்டனில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றதுடன் 1985 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற் பிரதம பதிப்பாசிரியராகவும் கோப்பாய் அரசினர் ஆசிரியர் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

தேசிய கலை இலக்கியப்பேரவையின் தலைவராயிருந்த இ. முருகையன் அப்பேரவையின் தொடக்க காலத்திலிருந்தே பங்கெடுத்து வந்ததுடன் தேசிய கலை இலக்கியப் பேரவையின் சஞ்சிகையான தாயகம் இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்துள்ளார். ஒருவரம், நெடும்பகல், அது-அவர்கள் நீண்ட கவிதை, மாடும் கயிறு அறுக்கும், நாங்கள் மனிதர் ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும் , ஆதிபகவன் ஆகிய கவிதை நூல்களையும் வந்து சேர்ந்தன, தரிசனம், கோபுரவாசல், வெறியாட்டு, மேற்பூச்சு, சங்கடங்கள், உண்மை ஆகிய பாநாடகங்களையும் கடூழியம், அப்பரும் சுப்பரும் ஆகிய மேடை நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 10 பக்கங்கள் 41
  • நூலக எண்: 72 பக்கங்கள் 179
  • நூலக எண்: 10384 பக்கங்கள் 158-171
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 45
  • நூலக எண்: 1033 பக்கங்கள் 02-03
  • நூலக எண்: 1033 பக்கங்கள் 05-06
  • நூலக எண்: 4694 பக்கங்கள் 27