ஆளுமை:பொன்னம்பலம், கதிரவேல்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:01, 23 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | பொன்னம்பலம் |
தந்தை | கதிரவேல் |
தாய் | சோதிமணி |
பிறப்பு | 1953.06.05 |
ஊர் | புத்தளம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பொன்னம்பலம், கதிரவேல் (1953.06.05 - ) புத்தளத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கதிரவேல்; இவரது தாய் சோதிமணி. இவர் புத்தளம் அரசினர் முஸ்லிம் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் புத்தளம் ஸாஹிராக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் கற்று நகைத் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இவர் தில்லையடிச் செல்வன் என்ற புனைபெயரில் எழுத்துலகில் அறியப்பட்டார். இவரது முதல் நெடுங்கவிதை பூமாலை சஞ்சிகையில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்தது. இவரது முதலாவது சிறுகதையான பாவமன்னிப்பு 1977.12.25 இல் வீரகேசரி வாரவெளியீட்டில் பிரசுரமானததைத் தொடர்ந்து 25 இற்கு மேற்பட்ட சிறுகதைகளையும் 100 இற்கு மேற்பட்ட கவிதை, கட்டுரை, விமர்சனம், ஆய்வு போன்றவற்றையும் எழுதியுள்ளார். மேலும் இவர் அவள் ஏற்றிய தீபம் என்ற மேடை நாடகத்தையும் அவனுக்கென்று ஒரு மனம் என்ற சிறுகதையையும் படைத்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 13943 பக்கங்கள் 81-84