ஆளுமை:தாவீது அடிகள், தாவீது

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தாவீது அடிகள்
தந்தை தாவீது
தாய் எலிசெபத்து
பிறப்பு 1908
ஊர் தும்பளை
வகை எழுத்தாளர், மொழி ஆய்வாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வண. பிதா தாவீது அடிகள், தாவீது (1908 - ) யாழ்ப்பாணம், தும்பளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தாவீது; இவரது தாய் எலிசெபத்து. இவர் தனது ஆரம்பக் கல்வியைச் சம்பத்திரிசியார் கல்லூரியில் பயின்று பின் யாழ்ப்பாணக் குருமடத்தில் சேர்ந்து 1932 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 22 ஆம் நாள் குரு நிலைப்படுத்தப்பட்டார். இவர் ஒரு சில ஆண்டுகள் யாழ்ப்பாணக் குருமடத்தில் கல்வி கற்றுப் பின் ஏறத்தாள ஐந்து ஆண்டுகள் இங்கிலாந்து, இத்தாலி, ஜேர்மனி, இந்தியா முதலிய நாடுகளுக்குச் சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் கற்றுச் சம்பத்தரிசியார் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார்.

இவர் சுவாமி ஞானப்பிரகாசர் தொடக்கி வைத்த சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதியைப் பின்பற்றித் தமிழ் - சிங்கள சொற்பிறப்பு ஒப்பியல் அகராதியை 1973 ஆம் ஆண்டு தமிழிலும் 1974 ஆம் ஆண்டு ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்பு

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 31-33
  • நூலக எண்: 16357 பக்கங்கள் 191-195