ஆளுமை:தங்கவேலு, சின்னத்துரை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:02, 5 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தங்கவேலு
தந்தை சின்னத்துரை
பிறப்பு 1943.10.17
ஊர் கைதடி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தங்கவேலு, சின்னத்துரை (1943.10.17 - ) யாழ்ப்பாணம், கைதடியைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. சாதாரண தரம் வரை கல்வி கற்ற இவர், நாதஸ்வரம் தொடர்பான ஆரம்பப் பயிற்சியை இணுவில் உருத்திராபதியிடமும் மேலதிகப் பயிற்சியை இந்தியா சென்று திருவாழப்புத்தூர் வேணுகோபாலிடமும் பயின்றார். இவர் கைதடி கந்தசாமி கோவில், நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில், யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் போன்ற பல ஆலயங்களில் நாதஸ்வரம் இசைத்துள்ளார். இவரது திறமையைப் பாராட்டி கைதடி இந்து வாலிபர் சங்கம் இசைஞானச் செல்வன் என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 89