ஆளுமை:சிவலிங்கம், மயில்வாகனம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:55, 23 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:சிவலிங்கம், மயில்வாகனம், [[ஆளுமை:சிவலிங்கம், மயில்வாகனம் (மாஸ்டர் சிவலிங...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவலிங்கம்
தந்தை மயில்வாகனம்
தாய் ரோகினிதேவி
பிறப்பு 1961.05.31
ஊர் கோண்டாவில்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவலிங்கம், மயில்வாகனம் (1961.05.31 - ) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த கல்வியியலாளர், ஆசிரியர். இவரது தந்தை மயில்வாகனம்; இவரது தாய் ரோகினிதேவி. இவர் ஆரம்பக் கல்வியை யாழ்.கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தில் கற்று இடைநிலை, உயர்தரக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியில் பெற்றார். இவர் 2002 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றதுடன் சமாதான நீதவானாகவும் கடமையாற்றுகின்றார். கவிதையாக்கம், நாடகம், சொற்பொழிவு முதலானவற்றில் சிறப்பாற்றல் கொண்டவராகவும் விளங்குகின்றார். வல்லிபுரநாதர் பாமாலை, காளியம்பாள் கவிமாலை, பர்வதவர்த்தினி பாமாலை, முத்துமாரியம்மன் திருவூஞ்சல் போன்றன இவரது நூல்களாகும். இவர் வரகவி, கவிஜோதி, ஆசிரியமணி முதலான பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 65-66