ஆளுமை:சுப்பிரமணியம், கே. கே.
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:35, 23 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சுப்பிரமணியம் |
பிறப்பு | 1929.10.06 |
ஊர் | காரைநகர் |
வகை | |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுப்பிரமணியம், கே. கே (1929.10.06) காரைநகரில் பிறந்தார். காரைநகர் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற இவர், நாற்பது ஆண்டு காலம் இலங்கைச் சுங்க இலாகாவிலும் 5 ஆண்டுகள் இலங்கை முதலீட்டுச் சபையிலும் பணி புரிந்தவர்.
இவர் கலைஞர்கள், பேச்சாளர்கள், சமய பெரியார்கள், உலகச் சைவப் பெரியார்கள், சிவாச்சாரியார்கள், இசை அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள் போன்றோருடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டது போல் தமிழையும் சைவத்தையும் இசையையும் வளர்த்தார். இவர் காரைநகர் சைவமகாசபை, மணிவாசக சபை ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்.
இவர் சமாதான நீதவான், இரசிக கலாமணி, அருள்நெறித் தொண்டர், பரோபகாரமணி, சிவதர்ம சுரபி முதலிய விருதுகளைப் பெற்றார்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 346