ஆளுமை:சிவலிங்கம், மு.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:43, 19 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவலிங்கம்
பிறப்பு
ஊர் மலையகம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவலிங்கம், மு. மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், அரசியல்வாதி. கலாபூஷணம் பட்டம் பெற்ற இவர், மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் செயலாளராகவும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார். மலையக மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியை ஸ்தாபித்தவர்களுள் முக்கியமானவரான இவர், அக்கட்சியின் செயலாளராகக் கடமை புரிந்ததோடு மத்திய மாகாண சபையின் பிரதித் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் ஒப்பாரி கோச்சி, மலைகளின் மக்கள், ஒரு விதை நெல், வெந்து தணிந்தது காலம் ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் உயிர் என்ற குறுநாவலையும் மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள் என்ற ஆய்வு நூலையும் எழுதியுள்ளார்.

இவர் மூன்று முறை அரச சாகித்திய விருதுகள், சுதந்திர இலக்கிய அமைப்பின் விருது, தமிழியல் விருது, கனகசெந்திநாதன் விருது, கலாபூஷணம் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 3392 பக்கங்கள் 03-05
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சிவலிங்கம்,_மு.&oldid=187050" இருந்து மீள்விக்கப்பட்டது