ஆளுமை:சிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிதம்பரப்பிள்ளை
தந்தை முத்துக்குமாரபிள்ளை
பிறப்பு 1820
இறப்பு 1889
ஊர் சங்குவேலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரபிள்ளை (1820 -1889) யாழ்ப்பாணம், சங்குவேலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை முத்துக்குமாரபிள்ளை. இவர் இளமையில் தமிழ் இலக்கண இலக்கியங்களில் மட்டுமன்றி ஆங்கிலத்தையும் கற்றுத் தருக்கம், கணிதத்தில் புலமையுடையவராகத் திகழ்ந்தார். இவர் யாழ்ப்பாணக் கல்லூரியில் சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் இலங்கை நேசன் பத்திரிகையில் கட்டுரைகளை எழுதிவந்ததுடன் இலக்கிய சங்கிரகம், தமிழ் வியாகரணம், நியாய இலக்கணம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். உவிஞ்சிலோ அகராதி தொகுக்கப்பட்ட காலத்தில் அப்பணிக்கு உறுதுணையாகவும் செயற்பட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 46-48
  • நூலக எண்: 963 பக்கங்கள் 113
  • நூலக எண்: 11601 பக்கங்கள் 122-131