ஆளுமை:சிதம்பரநாதன், மாரிமுத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிதம்பரநாதன்
தந்தை மாரிமுத்து
பிறப்பு 1946.07.18
ஊர் சுழிபுரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிதம்பரநாதன், மாரிமுத்து (1946.07.18 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை மாரிமுத்து. தனது ஒன்பதாவது வயதிலிருந்து எஸ். சுப்பையாபிள்ளை, ஏ. எஸ். இராமநாதன் போன்றோரிடம் தனது மிருதங்கக் கலையைப் பயின்று 1985 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை விரிவுரையாளராகப் பணிபுரிந்துள்ளார்.

இவர் ஈழத்தின் பல கலைமன்றங்களிலும் கோயில்களிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இலங்கை வானொலி, ரூபவாகினி கூட்டுத்தாபனம், டான் தமிழ் ஒலி போன்றவற்றிலும் மிருதங்கக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.

இவரது சேவைக்காக 2001 ஆம் ஆண்டில் மகாவித்துவான் வீரமணி ஐயரால் தண்ணுமை வேந்தன் பட்டமும் வலிகாமம் மேற்குக் கலாச்சாரப் பேரவையால் மிருதங்க கலைவாரிதி பட்டமும் இராமநாதன் நுண்கலைக்கழகத்தினால் சங்கீத ரத்னம் பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மேலும் இவர் கடந்த 40 ஆண்டுகளாக மிருதங்கக் கலைக்கு ஆற்றிய பங்களிப்பைக் கௌரவித்து 2007 இல் வடமாகாணக் கல்வி அமைச்சினால் ஆளுநர் விருதும், 2008 இல் கலாபூஷணம் விருதும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 102-103