ஆளுமை:குகநாதன், செல்லையா
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:20, 4 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | குகநாதன் |
தந்தை | செல்லையா |
தாய் | ராஜேஸ்வரி |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குகநாதன், செல்லையா புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சினிமாக் கலைஞர். இவரது தந்தை செல்லையா; இவரது தாய் ராஜேஸ்வரி. நடிகராக வர விரும்பிய இவரைக் கதை-வசன கர்த்தா ஆகுமாறு பேரறிஞர் அண்ணா ஊக்கமளித்தார். அதன் விளைவாகக் கதை-வசனம் எழுதத் தொடங்கிய குகநாதன் 249 படங்களுக்கு மேல் கதை-வசனம் எழுதியுள்ளார். 50 சொந்தப் படங்களை தயாரித்ததுடன், 51 படங்களில் இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.
இலங்கையில் முதன் முதலாக சமுதாயம் படத்தைத் தயாரித்திருந்தார். இவர் பூமாலை ' கலை- இலக்கியச் சஞ்சிகையை நடத்தியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 239