ஆளுமை:கந்தசாமி, செல்லையா
பெயர் | கந்தசாமி |
தந்தை | செல்லையா |
பிறப்பு | 1920.04.19 |
இறப்பு | 1998.04.10 |
ஊர் | திருநெல்வேலி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கந்தசாமி, செல்லையா (1920.04.19 - 1998.04.10) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை செல்லையா. பண்டத்தரிப்பு அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் இடைநிலைக் கல்வியைக் கற்ற இவர், அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தில் பணி புரிந்துள்ளார். முற்போக்குச் சிந்தனை கொண்ட இவர், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் யாழ்.மாவட்டத்தில் அக்கட்சியின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் தனது சிறிய தந்தையார் மட்டுவில் சிற்றம்பலம் ஆசாரியிடம் சிற்பக்கலையின் நுணுக்கங்களைக் கற்றறிந்து திருநெல்வேலியில் 'ஶ்ரீவாணன் சிற்பாலயம்' அமைத்துச் செயற்பட்டார். ஈழநாட்டில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் இருக்கும் சித்திரத் தேர்கள், சப்பைரதங்கள், மஞ்சங்கள், வாகனங்கள் இவரது சிற்பக் கலைக்குச் சாட்சியாக விளங்குகின்றன. நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கான முருகன் தேரும், திருமஞ்சமும் இவரால் அமைக்கப்பட்டவை. இவை பின்னர் போர்ச்சூழலில் அழிக்கப்பட்டன. சிற்பக்கலாமணி, கலாஜோதி, சிற்பக் கலாநிதி, சித்திர சிற்பமானி போன்ற பட்டங்களின் சொந்தக்காரராக இவர் விளங்குகின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 200