ஆளுமை:ஏரம்பமூர்த்தி, கிருஷ்ணசாமி
பெயர் | ஏரம்பமூர்த்தி |
தந்தை | கிருஷ்ணசாமி |
தாய் | தங்கம்மா |
பிறப்பு | 1927.11.16 |
இறப்பு | 2015.09.29 |
ஊர் | மீசாலை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஏரம்பமூர்த்தி, கி. (1927.11.16 - 2015.09.29) யாழ்ப்பாணம், மீசாலையைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை கிருஷ்ணசாமி; தாய் தங்கம்மா. வாய்ப்பாட்டு, வயலின் இசை, சோதிடம், இயற்கை மருத்துவம், கதாப்பிரசங்கம், மனையடி சாத்திரம், மரம் ஒட்டுதல் என பன்முக ஆளுமை கொண்டு விளங்கிய இவர், திரு. வி. கே. கந்தையா அவர்களிடம் வயலின், வாய்ப்பாட்டு இசையைக் கற்றுக் கொண்டார். மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் குரலிசையையும், வயலின் இசையையும் பயின்று 1954 இல் சங்கீதபூஷணம் பட்டம் பெற்றார். 1970 இல் சைவப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர் பட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.
இவர் 01.10.1968 இல் மீசாலை விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இசை ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின் பத்தாண்டுகள் பளை மகா வித்தியாலயம், ஏறாவூர் மகா வித்தியாலயம், கிரான் மகா வித்தியாலயம், கைதடி மகா வித்தியாலயம், கைதடி விக்கினேஸ்வரா வித்தியாலயம், எழுதுமட்டுவாழ் கணேச வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் பணி புரிந்து 01.10.1960 இல் ஓய்வு பெற்றார். 1960 களின் பிற்பகுதியில் மீசாலையில் இயங்கிய தமிழிசை மன்றத்தில் எட்டு ஆண்டுகள் இணைச் செயலாளராகப் பணியாற்றினார். சாவகச்சேரி இசைக்கலை மன்றம், தென்மராட்சி பக்திநெறிக் கழகம் என்பவற்றிலும் அங்கத்தவராகிச் சேவையாற்றினார்.
இவர் தமிழிசைக் கலைஞர், கலைஞானகேசரி , சங்கீத பூஷணம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 54-55
- நூலக எண்: 16946 பக்கங்கள் 53