ஆளுமை:அனஸ், எம். என். எம்.
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:19, 25 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | இளைய அப்துல்லாஹ் |
தந்தை | மொஹமட் நவாஸ் |
தாய் | ஹப்ஸா |
பிறப்பு | 1968.05.21 |
ஊர் | புளியங்குளம், முல்லைத்தீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இளைய அப்துல்லாஹ், மொ. (1968.05.21 - ) முல்லைத்தீவு, புளியங்குளத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மொஹமட் நவாஸ்; தாய் ஹப்ஸா. இவர் 1984 ஆம் ஆண்டில் எழுத்துலகில் பிரவேசித்து சிறுகதைகள், இலக்கியக்கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார். இவரது படைப்புக்கள் காலச்சுவடு, தீராநதி, உயிர்மை, அம்ருதா முதலான சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
இவர் 2005 ஆம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப் பரிசு, 2006 ஆம் ஆண்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சிறந்த பக்தி எழுத்தாளருக்கான பி. ஏ. சிறீவர்த்தன விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 13958 பக்கங்கள் 202-204