ஆளுமை:இராமனாதன், சோமசுந்தரம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:47, 22 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராமனாதன்
தந்தை சோமசுந்தரம்
பிறப்பு 1923.10.07
ஊர் தெல்லிப்பளை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமனாதன், சோமசுந்தரம் (1923.10.07 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட நாதஸ்வர இசைக்கலைஞர். இவரது தந்தை சோமசுந்தரம். தனது பதின்னான்காவது வயதிலிருந்து நாதஸ்வரக் கலையில் ஈடுபட்டிருந்த இவர், பக்கிரிசாமிப்பிள்ளை, உருத்திராபதி, நடராஜா, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் நாதஸ்வர இசையைப் பயின்றார்.

இவர் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட இசைக் கச்சேரிகளிலும், நல்லூர்க் கந்தன், மாவைக் கந்தன், யாழ்ப்பாண சிவன் உட்பட பல்வேறு ஆலயங்களிலும் தனது நாதஸ்வரக் கச்சேரிகளை நிகழ்த்தினார். இவர் மாவிட்டபுரத்தில் இலவசப் பாடசாலை ஒன்றைத் தந்தை செல்வாவின் உதவியுடன் அமைத்து மாணவர்களுக்கு இசையைக் கற்பித்தார். ஈழநாடு, தினபதி, உதயன் போன்ற பத்திரிகைகளில் செய்தியாளராகப் பணியாற்றியதுடன் 'இசையாளன்' என்ற மாத சஞ்சிகை ஒன்றையும் இவர் வெளியிட்டுள்ளார்.

இவரது கலைச்சேவைக்காகச் சமூகத் தொண்டன், கலாபூஷணம், கலைஞானகேசரி, ஸ்வரஞான கலாமணி, இசைஞான வாரிதி ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 84