ஆளுமை:இரத்தினேசுவர ஐயர்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:01, 21 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | இரத்தினேசுவர ஐயர் |
பிறப்பு | |
ஊர் | உடுவில் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இரத்தினேசுவர ஐயர் யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடத்தில் இலக்கண, இலக்கியங்களை முறையே கற்றுக் கொண்டார். இவர் செட்டிநாட்டிலிருந்து சிவநேசன் என்னும் பத்திரிகையினை நீண்டகாலம் வெளியிட்டுக் கொண்டிருந்ததோடு புராணங்களுக்குப் பயன் சொல்லும் யாழ்ப்பாணப் பரம்பரையினைப் பேணி பல இடங்களிலும் புராண படலங்களைத் தொடக்கிப் பயன் சொல்லி வந்தார்.
சுன்னாகம் வரத பண்டிதர் இயற்றிய கிள்ளை விடு தூது என்னும் நூல் இவரால் பதிப்ப்பிக்கப்பட்டதோடு பிரசங்க இரத்தின தீபம், செந்தமிழ்ப் பூம்பொழில் போன்றன இவரால் இயற்றப்பட்ட நூல்களாகும்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 37-38