ஆளுமை:ஆழ்வாப்பிள்ளை, வீரகத்தி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆழ்வாப்பிள்ளை
தந்தை வீரகத்தி
பிறப்பு 1895
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆழ்வாப்பிள்ளை, வீரகத்தி (1895 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வீரகத்தி. நாடகம், மரபுக்கவிதை, காவடி, சிறுவர் நடனம் ஆகிய துறைகளில் ஆர்வம் கொண்ட இவர், உடுப்பிட்டி அண்ணாவியார் ஆறுமுகம், பண்டிதர் மயில்வாகனம் ஆகியோரிடம் தனது கலையைப் பயின்றதோடு 1910 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணியை ஆரம்பித்தார்.

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நாடக அரங்குகளை ஆட்சி செய்து கொண்ட இவர், இந்திய நாடகக் கலைஞர்கள் பலருடன் நடித்துப் பாராட்டுப் பெற்றுள்ளார். இவரது இறப்பிற்குப் பின் கரவெட்டிப் பிரதேச மக்களால் வெளியிடப்பட்ட ஈழத்து இசைநாடக மேதை கவிமணி எம். வி. கிருஷ்ணாழ்வார் என்னும் நூல் இவரது கலைச்சேவைக்குச் சான்றாகும்.

1959 ஆம் ஆண்டில் கரவெட்டிப் பிரதேச மக்கள் திரண்டு நடாத்திய பாராட்டு விழாவில் இவரை ஊர்வலமாக அழைத்துச் சென்று இலங்கையர் திலகம் என்னும் பெரும் கௌரவிப்பினை வழங்கினார்கள்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 128-129