பலஸ்தீனக் கவிதைகள்
பலஸ்தீனக் கவிதைகள் | |
---|---|
நூலக எண் | 265 |
ஆசிரியர் | எம். ஏ. நுஃமான் |
நூல் வகை | கவிதை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மூன்றாவது மனிதன் பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 1981, 2000 |
பக்கங்கள் | iii + 56 , 162 |
[[பகுப்பு:கவிதை]]
வாசிக்க
- பலஸ்தீனக் கவிதைகள் (1.94 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- பலஸ்தீனக் கவிதைகள் (3.23 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம் (பதிப்பு 1)
இந்நூல் ஒன்பது பலஸ்தீனக் கவிஞர்களின் முப்பது கவிதை களைக் கொண்டுள்ளது. மஹ்முட் தர்விடி, பௌசி அல் அஸ்மார், றஷPட் ஹ{சைன், சலும் ஜுப்றான், தௌபிக் சையத், அன்தோய்னே கபாறா, பத்வாது கான், சமீஹ் அல் காசிம், டூயின் பசைசோ ஆகிய புகழ்பெற்ற கவிஞர்களின் கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. பாலஸ்தீனக் கவிதைகள் பற்றி கடாகர்மி எழுதிய கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இத்தொகுப்பிலுள்ள சமீஹ் அல் காசிமின் ஏழு கவிதைகளை மொழிபெயர்த்தவர் கவிஞர் முருகையன். ஏனையவற்றை எம்.ஏ.நுஃமான் மொழிபெயர்த்துள்ளார்.
பதிப்பு விபரம்
பலஸ்தீனக் கவிதைகள். எம்.ஏ.நுஃமான் (தொகுப்பாளர்). கல்முனை 6: வாச வெளியீடு, வாசகர் சங்கம், 1வது பதிப்பு, நவம்பர் 1981. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம்)
iii + 56 பக்கம். விலை: சாதாரண பதிப்பு: ரூபா 10. நூலகப் பதிப்பு: ரூபா 15. அளவு: 20 * 13.5 சமீ.
-நூல் தேட்டம் (826)
நூல் விபரம் (பதிப்பு 2)
1981 இல் வெளிவந்த 1வது பதிப்பில் 9 கவிஞர்களின் 30 கவிதைகள் இடம்பெற்றிருந்தன. இப்பதிப்பில் 15 கவிஞர்களின் 71 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. நிசார் கப்பானியும் ஃபத்வா துக்கான் தவிர்ந்த ஏனைய ஐந்து பெண் கவிஞர்களும் இத்தொகுதியில் புதிதாக இடம்பெற்றுள்ளனர். பலஸ்தீனக் கவிதைகள் வெளிப்படையான அரசியல் சார்வுடையவை. இது பலஸ்தீனப்படைப்பாளிகளின் வாழ்நிலை அனுபவத்தின் அடிப்படையில் அமைவது.
பதிப்பு விபரம்
பாலஸ்தீனக் கவிதைகள். எம்.ஏ.நுஃமான். கொழும்பு 2: மூன்றாவது மனிதன் வெளியீடு, 2வது பதிப்பு, நவம்பர் 2000. 1வது பதிப்பு, நவம்பர் 1981. (Chennai 4: Multi Crafts.)
162 பக்கம். விலை: இந்திய ரூபா 200. அளவு: 21 * 14 சமீ.
-நூல் தேட்டம் (826)