ஆளுமை:மாற்கு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாற்கு
பிறப்பு 1933
இறப்பு 2000
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாற்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். இன்று இவரை மக்கள் அங்கீகரிக்கின்றனர் என்றால் அதற்கு இவருடை மாணவர்களின் ஓவியக் காட்சிகள் இட்ட பலமான அத்திவாரமே காரணமாகும். 1957இல் அரசினர் கலைக்கல்லூரியில் பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறிய இவர் மங்கல் வர்ண ஓவியங்கள் வரைதல், அல்லது அவரே கூறுவது போன்ற கழுவுதற்பாணிச் சித்தரிப்பில் அதிக ஆர்வமுடையவராக விளங்கினார்.

1970ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய 1980ஆம் ஆண்டு வரை ரேகைச் சித்திரங்களின் பாணி மாற்குவின் ஓவியங்களில் மேலோங்கி காணப்படுகின்றது. இவரது ஓவியங்களில் சிற்பிக்குள்ளிருந்து என்ற ஓவியமும்(1968), இராப்போசனம் ஓவியமும் (1974) குறிப்பிடத்தக்கவை. இவ் ஓவியங்கள் இவரை சமகால ஓவிய படைப்புக்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது. மாற்குவினது ஊடகத் தெரிவுகளும் ஓவிய வெளிப்பாடுகளும் அவரது நெஞ்சுரத்தையும் சமூக நோக்கையும் தெரிவிப்பதாக உள்ளது.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 35-37
  • நூலக எண்: 14642 பக்கங்கள் 19-23
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மாற்கு&oldid=179569" இருந்து மீள்விக்கப்பட்டது