ஆளுமை:செல்வராச கோபால், கதிர்காமத்தம்பி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:16, 11 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்வராச கோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வராச கோபால்
தந்தை கதிர்காமத்தம்பி
தாய் வள்ளியம்மை
பிறப்பு 1928.12.13
இறப்பு 2010.12.21
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வராசகோபால், கதிர்காமத்தம்பி (1928.12.13 - 2010.12.21) மட்டக்களப்பு, செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கதிர்காமத்தம்பி; தாய் வள்ளியம்மை. இவர் ஈழத்துப் பூராடனார் என்ற புனை பெயரால் பலராலும் அறியப்பட்டார். ஆசிரியராக கடமையாற்றியுள்ள இவர் இலங்கைக் கலவரத்திற்குப் பிறகு 1983 அளவில் கனடாவில் குடியேறியுள்ளார்.

இவர் 35 ஆண்டுகள் தேடித் திரட்டிய சொற்களை உயர்திணைப் பெயர் மஞ்சரி (11 செய்யுள்), அஃறிணைப் பெயர் மஞ்சரி (12 செய்யுள்கள்), தொழிற்பெயர் மஞ்சரி (26 செய்யுள்கள்), இடப்பெயர் மஞ்சரி (9 செய்யுள்கள்), கலாசாரச் சொல் மஞ்சரி (23 செய்யுள்) என ஐந்து வகையாக பகுத்து நீரரர் நிகண்டு என்ற நிகண்டு நூலை எழுதியுள்ளார். மேலும் இலங்கை மட்டக்களப்பு மக்களின் நாட்டுப்புறக் கலைகள், பழக்க வழக்கம் பண்பாடு உணர்த்தும் வகையில் மட்டக்களப்பின் மகிழ்வுப்புதையல்கள், கிழக்கிலங்கை மக்களின் எழுதா இலக்கியங்கள், வயல் இலக்கியம்,ஊஞ்சல் இலக்கியம், வசந்தன்கூத்து ஒரு நோக்கு, மட்டக்களப்பு மாநில உபகதைகள் போன்ற நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து கூத்தர் வெண்பா, கூத்தர் விருத்தம், கூத்தர் குறள், கூத்தர் அகவல், கிழக்கு ஈழமரபுவழி இருபாங்கு கூத்துக்கலை ஆய்வுக்கான தகவல் திரட்டு, கூத்துக்கலைத் திரவியம் உட்பட மேலும் பல நாடக நூல்களையும் ஐங்குறுநூற்று அரங்கம், சூளாமணித் தெளிவு, கல்லாடம் கற்போம் சொல்லாடுவோம், நைடதம் யாருக்கும் ஒரு ஔடதம் ஆய்வுக்கண்ணோட்டம், சீவகசிந்தாமணி ஆய்வுச் சிந்தனைகள், பெருங்கதை ஆய்வுநோக்கு, வல்வைக் கடலோடிகள் போன்ற ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13389 பக்கங்கள் 50-52