ஆளுமை:உருத்திரமூர்த்தி, துரைசாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உருத்திரமூர்த்தி
தந்தை துரைசாமி
பிறப்பு 1927.01.09
இறப்பு 1971.06.20
ஊர் அளவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உருத்திரமூர்த்தி, துரைசாமி (1927.01.09 - 1971.06.20) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை துரைசாமி. 1945 ல் கொழும்பு திறைசேரியில் எழுதுவினைஞராக தனது அரசசேவையை ஆரம்பித்த இவர், தொடர்ந்து திருக்கோணமலை கடற்படை அலுவலகத்திலும், பின்னர் கொழும்பு குடிவரவு/ குடியகல்வுத் திணைக்களத்திலும் பணியாற்றி, 1967ல் இலங்கை நிர்வாக சேவைக்கு தேர்வு பெற்றார். அதன்பின் மாவட்டக் காணி அதிகாரியாக (DLO) மன்னாரில் நியமனம் பெற்று, பின்னர் யாழ்ப்பாண மாவட்டக் காணி அதிகாரி (1968-1969), மட்டக்களப்பு அரச செயலகத் துணைவர் (1970) ஆகிய பதவிகளை வகித்து, 1971ல் கொழும்பு அரசகரும மொழித் திணைக்களத்தில் உதவி ஆணையாளராக நியமனம் பெற்றார்.

கல்லழகி, சடங்கு பாரிநிலையம், தகனம் ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், கண்மணியாள் காதை ஆகிய காவியங்களும் வள்ளி, மஹாகவியின் குறும்பா, மஹாகவியின் கண்மணியாள் காதை, மஹாகவியின் கோடை(பா நாடகம்), ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் , வீடும் வெளியும் (கவிதைத் தொகுதி), மஹாகவியின் இரண்டு காவியங்கள், மஹாகவி கவிதைகள் (1984), புதியதொரு வீடு (1989), மஹாகவியின் ஆறு காவியங்கள், கல்லழகி, சடங்கு, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், கண்மணியாள் காதை, கந்தப்ப சபதம், தகனம், மஹாகவியின் மூன்று நாடகங்கள், கோடை, புதியதொரு வீடு, பொருள் நூறு நூறு குறும்பாக் கவிதைகள் போன்றன உட்பட மேலும் பல நூல்களும் இவரால் இயற்றப்பட்டுள்ளன.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 10 பக்கங்கள் 21
  • நூலக எண்: 106 பக்கங்கள் 58-70
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 280-296
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 40
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 61-65
  • நூலக எண்: 14323 பக்கங்கள் 11-14