ஆளுமை:அந்தோணிப்பிள்ளை, பி. பி.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:09, 24 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அந்தோணிப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | அந்தோணிப்பிள்ளை |
பிறப்பு | 1941.03.27 |
ஊர் | முருங்கன் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அந்தோணிப்பிள்ளை, பி. பி. (1941.03.27 - ) மன்னார், முருங்கனைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் மன்னார் மாவிலங்கேனி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, மன்னார் முருங்கன் மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் பரமேஸ்வரா கல்லூரி, யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். 1968ஆம் ஆண்டு ஆசிரிய சேவையில் இணைந்த இவர் தொடர்ந்து அதிபராக நியமனம் பெற்று 27.03.2001இல் தனது அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றார்.
பாடி மகிழ்வோம், பாடிப் பயன் பெறுவோம், பாட்டுப்பாடி ஆடுவோம், கிராமத்தின் இதயம், சிறுவர் சிந்தனை விருந்து உட்பட 25க்கும் மேற்பட்ட நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். கவிதை கலசம் நிகழ்ச்சியில் நூறுக்கும் மேற்பட்ட இவரது கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 10132 பக்கங்கள் 03