ஆளுமை:சுப்பிரமணியன், தாமோதரம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:46, 24 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சுப்பிரமணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பிரமணியன்
தந்தை தாமோதரம்பிள்ளை
தாய் பரஞ்சோதி
பிறப்பு 1937.11.22
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியன், தாமோதரம்பிள்ளை (1937.11.22 - ) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர்; ஓவியர். இவரது தந்தை தாமோதரம்பிள்ளை; தாய் பரஞ்சோதி. திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி, கொழும்புத்துறை ஆசிரியர் கல்லூரி, மட்டக்களப்பு ஆசிரியர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ள இவர் 15 வருடங்கள் உதவி ஆசிரியராகவும் 22 வருடங்கள் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.

1954ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையில் நேர்த்திக்கடன் என்ற தலைப்பில் இவரது முதலாவது ஆக்கம் வெளியானது. சிறுகதை, நாவல், நாடகம், கவிதை என்பன எழுதிவருவதுடன் இவர் ஓவியம் வரைவதிலும் ஆற்றல் கொண்டவராக விளங்கினார். இவரது விடாமுயற்சி, சந்தனக்குச்சு ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களும் இதயங்கள் அழுகின்றன என்ற நாவலும் நடையிலே மூன்று நாட்கள் என்ற குறுநாவலும் வெளிவந்துள்ளது. மூத்த கலைஞர் விருது, கலாபூஷணம் விருது ஆளுநர் விருது ஆகிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 8582 பக்கங்கள் 04