ஆளுமை:சாரணாகையூம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:03, 23 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சாரணாகையூம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சாரணாகையூம் |
பிறப்பு | 1938.05.23 |
ஊர் | பதுளை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சாரணாகையூம் (1938.05.23 - ) பதுளையைச் சேர்ந்த எழுத்தாளர். ஆரம்ப காலங்களில் குழந்தைக்களுக்காக கவிதை எழுதிய இவர் காலப்போக்கில் சமூகம் சார்ந்தும் இஸ்லாமிய கருத்தியல் சார்ந்ததுமான படைப்புக்களை படைத்து வந்துள்ளார். ஈழநாடு, சுதந்திரன், சிந்தாமணி, தினபதி, இன்ஸான், எழுச்சிகுரல், நவமணி, உம்மத், தாரகை உட்பட மேலும் பல பத்திரிகைகளிலும் இதழ்களிலும் இவர் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியுள்ளதோடு சிறுவர் பாரதி என்ற சிறுவர் சஞ்சிகையையும் எழுதி வந்தார்.
குர்ஆன் ஹதீஸ், நபிகள் நாயகம், கவிதை நெஞ்சம், சிறுவர் பாட்டு, நன்னபி மாலை, என் நினைவில் கவிஞர் முதலியன இவர் எழுதிய நூல்களாகும். கலாபூஷணம் விருதையும் குழந்தைக் கவிஞர், இலக்கியச் சுடர், கவிமணி ஆகிய பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 8167 பக்கங்கள் 03