ஆளுமை:வேல் நந்தகுமார், வேலும் மயிலும்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:58, 21 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வேல் நந்தகு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேல் நந்தகுமார்
தந்தை வேலும் மயிலும்
தாய் வசந்தாதேவி
பிறப்பு 1979.03.09
ஊர் புலோலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேல் நந்தகுமார், வேலும் மயிலும் (1979.03.09 - ) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலும் மயிலும்; தாய் வசந்தாதேவி. யாழ்ப்பாணம் மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம், ஹாட்லிக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர் தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி தமிழ்ச் சிறப்புக் கலைமாணி கற்கையை பூர்த்தி செய்துள்ளார். கல்வியியல் டிப்ளோமா கற்கை நெறியையும் இவர் பூர்த்தி செய்துள்ளார். யாழ்ப்பாண தேவரையாளி இந்துக் கல்லூரியில் தற்காலிக இணைப்பில் தமிழ் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

நடிகரும் நெறியாளராகவும் விளங்கும் இவர் இளங்கோ கழகத்தில் செயலாளராக இருந்து எட்டுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது ஆக்கங்கள் வலம்புரி, சங்குநாதம், தினக்குரல் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. வடமராட்சியில் தமிழ் ஆசிரியராகவும், வடமராட்சி வடக்குப் பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் இளைய ஆலோசக உறுப்பினராகவும் சிறந்த ஒலிபரப்பாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டிகளில் கவிதை, பாடலாக்கம் ஆகியவற்றில் தேசியமட்ட சிறப்பு பரிசு, பிரதேச சாஹித்திய விழாப் பரிசுகள், சான்றிதழ்கள் என்பவற்றை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3224 பக்கங்கள் 07