ஆளுமை:பாலேஸ்வரி, நல்லரெட்ணசிங்கன்
பெயர் | பாலேஸ்வரி |
தந்தை | பாலசுப்பிரமணியம் |
தாய் | கமலாம்பிகை |
பிறப்பு | 1929.12.07 |
ஊர் | திருகோணமலை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் (1929.12.07 - ) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பாலசுப்பிரமணியம்; தாய் கமலாம்பிகை. இவர் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, திருகோணமலை புனித மரியாள் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். தொடர்ந்து மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தனது பயிற்சியை முடித்துக் கொண்டு ஆசிரியப் பணியை மேற்கொண்டார்.
40 வருடங்களுக்கு மேலாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வந்த இவர் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளதோடு சுமைதாங்கி, தெய்வம் பேசுவதில்லை ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். 1966இல் வீரகேசரியில் வெளியான சுடர்விளக்கு என்பது இவரது முதலாவது நாவலாகும். தொடர்ந்து சுடர்விளக்கு, பூசைக்கு வந்த மலர், உறவுக்கப்பால், கோவும் கோயிலும், உள்ளக்கோயில், பிராயச்சித்தம், மாது என்னை மன்னித்துவிடு, உள்ளத்தினுள்ளே, எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு, தந்தைவிடு தூது, நினைவு நீங்காதது, அமலா உனக்காக ஆகிய 12க்கும் மேற்பட்ட நாவல்களை இவர் எழுதியுள்ளார்.
தமிழ் மணி, சிறுகதை சிற்பி பட்டம், ஆளுனர் விருது, கலாபூசண விருது ஆகிய பட்டங்களையும் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 1858 பக்கங்கள் 17-22
- நூலக எண்: 397 பக்கங்கள் 04-06
- நூலக எண்: 2043 பக்கங்கள் 34-35