ஆளுமை:தில்லைநாதன், சின்னையா
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:17, 10 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தில்லைநாதன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | தில்லைநாதன் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தில்லைநாதன், எஸ். ஓர் எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக பதவி வகித்த இவர் அங்கு தமிழ் சங்கம், சங்கீத நாட்டிய சங்கம், இந்து மாணவர் சங்கம் என்பவற்றின் பெருந்தலைவராகப் பணியாற்றியுள்ளார். மேலும் தேசிய மட்டத்தில் இலங்கைக் கலைக்கழக உறுப்பினராகவும், கலைக்கழக தமிழ் இலக்கியக் குழு தலைவராகவும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணியாளர் சபை உறுப்பினராகவும் கண்டி பொது நூலக அலோசன சபை உறுப்பினராகவும் பணி புரிந்தார்.
2004இல் தேசிய கலை இலக்கியப் பெருவிழாவில் நாட்டின் அதி உயர் விருதான தேச நேத்ரா விருதை இவர் பெற்றுள்ளதோடு தொடர்ந்து இலக்கியச் செம்மல், கலாகீர்த்தி போன்ற பல விருதுகளையும் பட்டங்ளையும் இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1033 பக்கங்கள் 03