ஆளுமை:ஶ்ரீதயாளன், சின்னத்தம்பி
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:41, 8 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஶ்ரீதயாளன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | ஶ்ரீதயாளன் |
தந்தை | சின்னத்தம்பி |
பிறப்பு | |
ஊர் | கொக்குவில் |
வகை | பேச்சாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஶ்ரீதயாளன், சின்னத்தம்பி யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த பேச்சாளர். 1970இல் கல்விப் பணியை ஆரம்பித்த இவர் திருமலை, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் சைவ ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளதோடு யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயா கல்லூரி, யாழ்ப்பாண மத்திய கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றிய பின் கல்வித் திணைக்கள கல்விப் பணிப்பாளராகவும் கடமை புரிந்துள்ளார்.
இலங்கையிலுள்ள அனைத்து ஆலயங்களிலும் வானொலி நேரடி அஞ்சல்களுக்கான இவரது கணீரென்ற குரல் நேயர்களின் மத்தியில் பிரபலமானது. இவரது திறமைக்காக 1984இல் உடுவை சிவஞானவாரியத்தினால் சிவஞானதுரந்தர் என்ற பட்டத்தை இவர் பெற்றுள்ளதோடு சித்தங்கேணி அரச அதிபரால் கானதமிழ் மணி என்ற பட்டத்தையும் இந்து கலாசார அமைச்சினால் கலைஞான கேசரி, இந்து குருமார் ஒன்றியத்தினால் வாகீசகலாபமணி என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 401 பக்கங்கள் 15