ஆளுமை:இராமன், இரா. அ.
பெயர் | இராமன்
தந்தை= |
பிறப்பு | 1942.12.03 |
ஊர் | கண்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இராமன். இரா. அ. (1942.12.03 - ) கண்டி, மஹியாவைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் 1960இல் சமூகத்தின் இளம் சந்ததியினரை ஒன்று திரட்டி மறுமலர்ச்சி என்ற பெயரில் மன்றம் ஒன்றை நிறுவி அதன் தலைவராக பணியேற்று சமூக சீர்த்திருத்த செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினார். தொடர்ந்து 1969இல் அம்மா என்ற ஒரு சஞ்சிகையை ஆரம்பித்தார்.
நூல் வெளியீடுகளின் மூலமாக மலையக இலக்கியத்திற்கு பெரும்பணி ஆற்றியுள்ள துரை விஸ்வநாதன் அவர்களின் நினைவாக எழுந்துள்ள துரைவி இலக்கிய சிந்தனை வட்டம் என்ற அமைப்பின் மூலம் இலக்கிய கலந்துரையாடல்களையும் நிகழ்த்தி வந்துள்ளார். இலக்கிய உலகில் இவர்கள் என்ற நூலையும் இவர் எழுதியுள்ளார். இவர் தனது மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் மூலம் கடைசியாக வெளியீடு செய்த இதழ் கண்டி இலக்கியச் செய்தி மடல் ஆகும்.
இவரது பணிகளுக்காக பேராதனைப் பல்கலைக்கழகத்தினால் 1996இல் மக்கள் கலைமைணி என்ற பட்டத்தை இவர் பெற்றுள்ளார். மேலும் 1999இல் நடைபெற்ற மத்திய மாகாண முஸ்லிம் சாகித்திய விழாவில் கலைச்சுடர் என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 396 பக்கங்கள் 04-06