ஆளுமை:அல்பிரட் தம்பிஐயா, பிலிப் மனுவேற்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:48, 2 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அல்பிரட் தம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அல்பிரட் தம்பிஐயா
தந்தை பிலிப் மனுவேற்பிள்ளை
தாய் ரோசாமுத்து
பிறப்பு 1903.11.08
ஊர் கரம்பன்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பிஐயா, அல்பிரட் (1903.08.11 - ) யாழ்ப்பாணம், கரம்பனைச் சேர்ந்த சினிமாக் கலைஞர். இவரது தந்தை பிலிப் மனுவேற்பிள்ளை: தாய் ரோசாமுத்து. இவர் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி, யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரி, கொழும்பு புனித ஜோசப் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றதோடு இங்கிலாந்திற்குச் சென்று பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார்.

இவர் தனது சினிமா தொழிலை விருத்தி செய்ய விரும்பி தனது நண்பரான் சேர். சிற்றம்பலம் கார்டினரை துணையாகச் சேர்த்து சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை வாங்கினார்கள். இதுவே இலங்கையின் முத்ன்மையான் சினிமா நிறுவனமாக உயர்ந்தது. மேலும் அரசியலில் ஆர்வம் கொண்ட இவர் 1948இல் முதலவது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 21-25